தலபெருமை :
இங்குள்ள அம்மன் கடும் உக்கிரத்துடன் தலை மட்டுமே உடைய ஆதி துலுக்காத்தம்மன் ஆவாள் . பின்னாளில் அம்மனின் திருவுருவ திருமேனியை கருவறையில் பிரதிஷ்டை செய்து வழிபட துவங்கி உள்ளனர் . விநாயகர் பைரவர் அய்யப்பன் மற்றும் சப்த கன்னியர்களுக்கு இங்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன .
சங்கடஹர சதுர்த்தி அஷ்டமியில் பைரவருக்கு சிறப்பு பூஜை ஐயப்ப பஜனை என எப்பொழுதும் கோயிலில் விழாக்களும் விஷேங்களும் நடைபெற்று கொண்டிருக்கின்றன .
செவ்வாய் வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இங்கு வந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் பெண்கள் ஏராளம் .ஆடிமாதத்தில் எல்லா நாட்களிலும் அம்மனை தரிசித்து தங்களது கோரிக்கைகளை வைத்து செல்கின்றனர் பக்தர்கள் .
இந்த மூன்று நாள் அம்மன் திருவீதி உலா வரும் அழகை காண கோடி கண்கள் வேண்டும் . பின்னர் படையல் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் .
இந்த அன்னதானத்தை உட்கொண்டால் பிள்ளை பாக்கியம் கிடைப்பது உறுதி என்கின்றனர்
பக்தர்கள் . ஆடிமாதம் 4 வது ஞாயிற்று கிழமை அம்மானுக்கு கூழ் வார்த்தல் நடைபெறுகிறது . இங்கு தங்களது மனக்குறையை சொல்லி வழிபட்டால் போதும் வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் தந்தருள்வாள் இங்கு வீற்றிருக்கும் துலுக்காணத்தம்மன் .
தலவரலாறு .
இஸ்லாமிய பெண்மணி தன் மகனுக்கு பார்வை கிடைக்கவேண்டும் என்று அம்மனிடம் வேண்டிக்கொண்டாள் . அவர்களின் பிரார்த்தனையை ஏற்ற அம்மன் அந்த குழந்தைக்கு பார்வையை தந்து அருளினாள் அம்மன் .
அன்று முதல் அந்த அம்மன் ஆதி துலுக்காணத்தம்மன் என்று அழைக்கப்பட்டதாக கூறுகிறது தல வரலாறு . சுமார் 100 வருடங்களுக்கு சென்னை நுங்கம்பாக்கத்திற்கு அருகில் ஒரு ஓடை இருந்ததாகவும் அந்த ஓடையில் இருந்து ஒருநாள் அம்மனின் தலை மட்டும் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது .
ஆரம்பத்தில் அண்ணாசாமி என்பவரால் பனை ஓலைகளால் கொண்டு கட்டப்பட்ட இந்த கோயில் அந்த ஊர்காரர்களின் அம்மனின் சக்தியை அறிந்து அனைவரும் வந்து வணங்க ஆரம்பித்தனர் . அதன் பிறகு அனைவரின் முயற்சியாலும் இந்த கோயில் கட்டடமாக எழுப்பப்பட்டது என்கின்றனர் பக்தர்கள் .
பிரார்த்தனை :
பிள்ளை பாக்கியம் கிடைக்க மாங்கல்ய பலம் நிலைக்க பக்தர்கள் இங்குள்ள அம்மனை வந்து வழிபடுகின்றனர் .
நேர்த்திக்கடன் :
தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும் பொங்கல் வைத்தும் கூழ் வார்த்தும் தங்களது நேர்த்தி கடனை செலுத்துகின்றனர் .
தல சிறப்பு :
அம்மனின் சிரசு (தலை ) ஓடையில் கண்டெடுக்கப்பட்டது என்பது சிறப்பு .
கோயில் திறக்கும் நேரம் காலை 6 மணி முதல் 10 மணி வரை . மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை .
முகவரி :
அருள்மிகு ஆதி துலுக்காணத்தம்மன் திருக்கோயில் கோடம்பாக்கம் சென்னை :
குழந்தை பாக்கியம் வேண்டி பரிகாரம் செய்ய விரும்பும் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் அவர்கள் விருப்பப்பட்டால் அவர்களின் பெயரில் இத்திருக்கோயிலில் சிறப்பு பரிகார பூஜையே நம்பிக்கையடன் செய்யப்படும் . அவர்களின் பெயரில் பரிகார பூஜை செய்யப்படுவதை வீடியோ மூலம் பதிவு செய்து உங்களின் விலாசத்திற்கு அல்லது உங்களின் தொலைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும் .
![]() | ||||
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com

