அல்லது இரண்டு கிரகங்களும் இரண்டும் ஒரே வீட்டிலிருப்பது அல்லது பார்வைகளை பெறுவது இந்த தோஷமாகவும் . .
அதைவிட 7ல் சனி ஜாதகர்கள், கடக, சிம்ம லக்ன காரர்கள் இதனால் பொதுவாகவே பாதிக்கப்படுவார்கள். இதை விட சந்திரன் சனி நிற்கும் நட்சத்திரத்தை ஆய்வு செய்து ஏனய கிரக பார்வைகளை பொறுத்தே தோசம் எந்தளவுக்கு வேலை செய்யும் என முடிவுக்கு வரவேண்டும்.
ஜோடியை பிரித்து தனக்காக பயன்படுத்திய கர்மா காரணமாக இது ஏற்படும். அதன் பிரதிபலனாக இவர்கள் ஜோடி சேர நினைக்கும் போது வெளியே சொல்ல முடியாத நகைச்சுவைகள் நிகழும்.
விளைவுகள் சில…
திருமணம் ஏற்பாடாகி கடைசி நேரத்தில் ஏதாவது காரணங்களால் நின்று போகும். அதே நேரம் தோசமுள்ளவரை திருமணம் செய்ய தயாரானவருக்கு இன்னொரு இடத்தில் விரைவில் திருமணமாகிவிடும்.
தாமத திருமணம், தடைகளுக்கு பின்னரே திருமணம் என்பன இருக்கும்.
ஆண் பெண் சேர நினைக்கும் போது தடைகள் ஏற்படும்.
எதுவும் நினைத்தவுடனே நடந்துவிடாது. பல தடவை முயற்சி செய்து உடல் சோர்ந்த பின்னரே நினைத்த காரியம் ஓரளவு நடக்கும்.
தட்டில் இருந்தாலும் சாப்பிட முடியாத நிலை ஏற்படும்.
திருமணமானாலும் பல நாட்கள் பிரிந்தே இருக்கும்படி செய்யும்.
மன ரீதியாக குளப்ப நிலையிலேயே காணப்படுவார்கள்.
காதலித்தாலும் இது போன்ற காரணங்களுக்காக பிரித்துவிடும். மீண்டும் காதல் மீண்டும் பிரிவு என மாற்றிவிடும்.
எந்த ஒரு விடையத்திலும் தெளிவான முடிவெடுக்க முடியாத நிலையில் ஜாதகர் இருப்பார்.
சந்திரன் மனதுக்கு காரணமானவர் என்பதால் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு தவறான வாழ்க்கை துணையை தேர்வு செய்ய வைத்து காலம் முழுக்க மகிழ்ச்சியை கெடுத்துவிடும், அல்லது பிரிவை கொடுக்கும், அல்லது வேறு உறவுகளை நாட வைக்கும்.
சமூகத்திற்கு கட்டுப்பட்ட பலர் திருமணமாகியும் பிரம்மசாரியாக வாழ வைத்துவிடும். அல்லது எப்போதாவது தான் இருவரும் ஒரே வீட்டில் இருக்க நேரும்படி செய்துவிடும்.
மறு புறம் தொழிலில் உழைப்பு இருந்தால் அதற்கேற்ப உயர்வு இருக்கும்.
அரசியல், ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்பட்டு அதிலும் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும்.
எம்ஜீஆா், காமராஜர் போன்ற தலைவர்களும் பல மகான்களும் இதே அமைப்பை பெற்ற ஜாதகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவை அவரவர் ஜாதகத்திலுள்ள ஏனய கிரகங்களின் பர்ர்வைகளை பொறுத்து பலன்கள் மாறுபடும்.
இந்த மாதிரியான கிரக அமைப்பை உடைய ஜாதகர்கள் முறையான பரிகாரங்களை சித்து கொள்வது நன்மைகளை தரும் .
![]() |
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com

