Type Here to Get Search Results !

பிறந்த குழந்தையின் ஜாதகம் மாமனுக்கு தந்தைக்கு தோஷத்தை ஏற்படுத்துமா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

          


பிறந்த குழந்தை தாய் மாமனை விழுங்கி விட்டது . தந்தையை விழுங்கி விட்டது  என்று  சொல்வதில் உண்மை இருக்கிறதா ? 

இப்படிக் கூறுவதில் அடிப்படை உண்மை இல்லாமல் இல்லை. பாலாரிஷ்டதோஷம் போன்ற நூல்களில் இதற்கென்று சில அத்தியாயங்கள் உள்ளது. பிறந்தவுடன் தாயை இழக்கும் ஜாதகம், தந்தையை இழக்கும் ஜாதகம், உறவினர்களை அழிக்கும் ஜாதகம், தாய்மாமனுக்கு ஆகாத ஜாதகங்கள் என பலவகை ஜாதகங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது 


.சித்திரையில், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு சூரியன் பலவீனமாகி, 9வது இடத்தில் ராகு/கேது/சனி ஆகியவற்றில் ஏதாவது இருந்தால், அந்தக் குழந்தையால் அதன் தந்தைக்கு கண்டம் ஏற்படும். மருத்துவமனையில் பிறந்த குழந்தையை பார்க்க செல்லும் தந்தை வழியிலேயே விபத்தில் சிக்கி உயிரிழக்கலாம்

இதுபோன்ற கண்டங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முற்காலத்தில் குழந்தை பிறந்தவுடன் அதனை முதலில் குடும்பத்துப் பெரியவர்களிடம் (பேரன், பேத்தி எடுத்த மூத்தவர்களிடம்) கொடுத்து ஆசீர்வாதம் பெறச் செய்வர். இதன் காரணமாக அந்தக் குழந்தையின் தோஷம் குறையும் என்பது நம்பிக்கை.


இதேபோல் சந்திர கிரகணத்தில் பிறந்த குழந்தைக்கு, ஏழரைச் சனி/ அஷ்டமச் சனி இருந்து தாய் ஸ்தானம் வலுவாக இல்லாமல் இருந்தால் தாயின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

குழந்தையின் தோஷத்தால் மட்டும் தந்தை, தாய், உறவினர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. அவரவர் ஜாதகத்திலும் அந்தக் காலகட்டத்தில் ஆயுள் குறைவான தசா புக்தி நடக்கலாம். உதாரணமாக ஒருவர் ஜாதகத்தில் 5ஆம் இடத்தில் பாதகாதிபதி அமர்ந்திருந்தால் அவருக்கு குழந்தை பிறந்தவுடன் இறந்துவிடுவார் என ஜோதிடம் கூறுகிறது.

இதுபோன்ற ஜாதக அமைப்பை உடைய தம்பதியர், குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொள்வதன் மூலம் கண்டத்தில் இருந்து தப்ப முடியும். இதை ஏற்றுக்கொள்ளாமல் விவாதம் செய்யும் தம்பதிகளிடம் ஜாதக அமைப்பின் காரணமாக ஏற்படும் நிகழ்வுகளையும் தெளிவாக விளக்கிக் கூறுவோம்.

ஒரு சில தம்பதிகள் ஒரு குழந்தை போதும் என்ற மனநிலையுடன் இருப்பார்கள். ஆனால் அவர்களில் சிலருக்கு முதல் குழந்தையின் தசாபுக்தி வளர்ச்சியளிக்கும் வகையில் இருக்காது. இதனால் மேலும் ஒரு குழந்தை இருப்பது நல்லது என்று அறிவுரை கூறுவோம்.

மேலும் ஒரு சில தம்பதிகள் முதல் குழந்தை இருந்தாலும், மேலும் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்படுவதாகக் கூறுவர். இதில் முதல் குழந்தையின் ஜாதகத்தில் சகோதர ஸ்தானம் வலுவில்லாமல் இருக்கும்பட்சத்தில் அவர்கள் 2வது குழந்தைக்கு முயற்சிக்காமல் இருப்பது நல்லது.

ஏனெனில் முதல் குழந்தையின் ஜாதகத்தில், மனவளம் குன்றிய அல்லது ஊனமுற்ற சகோதர/சகோதரி இருப்பதற்கான கிரக அமைப்பு காணப்படும். அதனால் 2வது குழந்தையை தவிர்த்து விட வலியுறுத்துவோம்.

வாரி வழங்கும் குழந்தைகளின் அமைப்பு: ஒரு சில தம்பதிகளுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில், அறிவு, அழகு, லட்சுமிகடாட்சம் பொருந்திய குழந்தைகள் பிறப்பதுண்டு.

நல்ல யோகமான தசாபுக்தியில் ஒரு குழந்தை பிறக்கும் போது அது வெள்ளிதட்டில் உணவு உண்டு, சகல சம்பத்துகளையும் கொண்டு வாழும் தன்மை பெற்றிருக்கும். எனவே, அந்த வசதிகளை குழந்தைக்கு அளிக்கக் கூடிய அளவுக்கு பெற்றோரின் வாழ்வில் திடீர் ஏற்றம் ஏற்படும். தொழில் சிறக்கும், செல்வச் சேர்க்கை அதிகரிக்கும்.



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

கருத்துரையிடுக

0 கருத்துகள்