தலவரலாறு :
அங்காளம்மன் பல ஊர்களில் பல கோயில்களில் குடி கொண்டும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள் . தன் கோயிலை தேடிவரும் பக்தர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் மாபெரும் சக்தியும் பேரருளும் பெற்றவளுமான அங்காளம்மன் ஓர் அற்புத கோயிலாக இந்த கோயிலை பற்றிய தல வரலாறு கூறுகிறது .
தலபெருமை :
இக்கோயிலின் கோபுரங்கள் மிக அழகானவை . பல வண்ணங்களில் பல தெய்வங்களின் திருவுருவங்களை நிர்மாணிக்கப்பட்டு கண்கொள்ளா காட்சியாக திகழ்கிறது . கோயிலின் உள்ளே நுழைந்ததுமே மூலஸ்தானத்தில் அங்காளம்மன் வீற்றிருக்கிறாள் . பிரகாரத்தை வலம் வரும்பொழுது லட்சுமி நாராயணர் தரிசனம் தருகிறார்கள் .
இவர்களுக்கு அடுத்து ஒரு கையை ஓங்கி உயர்த்தி தூக்கி இருக்கும் ஆஞ்சநேயர் . இரு கைகளை கூப்பி மானசீகமாக ஸ்ரீராமரை வணங்கும் பக்த பக்த ஆஞ்சநேயர் உள்ளனர் . கோயிலுக்கான நிர்மாண பணியின் போது கிணற்றில் தூர் வாரினர் . அப்பொழுது சுயம்புவாக கிடைத்தவர்கள் இவர்கள் .
இவைகளை அடுத்து வினை தீர்க்கும் விநாயகரின் திருவுருவம் உள்ளது . அடுத்து நமக்கு தரிசனம் தருபவர் ஐயப்ப சுவாமி . ஐம்புலன்களை அடக்கி ஆண்டு விரதம் இருந்தால் ஐஸ்வரியங்களை அள்ளித்தருகிறார் இவர்
தல சிறப்பு :
வழக்கமாக அம்மன் கோயில்களில் அம்மன் முன்பாக சிம்மம் தான் காணப்படும் . ஆனால் இங்கு சிவனுக்குரிய நந்தி காணப்படுவது சிறப்பு .
பொது தகவல் :
இங்கு லட்சுமி நாராயணர் ஆஞ்சநேயர் விநாயகர் அய்யப்பன் காமாட்சி அம்மன் குண்டலினி மகரிஷி துர்க்கை பாவாடை ராயன் செல்லியம்மன் . காளிகாம்பாள் வள்ளி தெய்வானையுடன் முருகன் சன்னதிகள் உள்ளன .
பிரார்த்தனை :
வம்பு வழக்குகள் போன்ற சிக்கல்களை விரைவில் தீர்த்துவைத்து பக்தவர்களுக்கு பிரச்சனையற்ற வாழ்வை அளிப்பவள் இங்கு வீற்றிருக்கும் அங்காளம்மன் .
இங்குள்ள அம்மனுக்கு அபிஷேகம் செய்து மாலை சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர் .
கோயில் திறக்கும் நேரம் :
காலை 5 மணி முதல் 9 மணிவரை . மாலை . 6 மணி முதல் இரவு 8 மணி வரை
முகவரி :
அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் . சின்ன சுப்பாராய பிள்ளை தெரு . புதுசேரி .
குறிப்பு :
வெளிநாடுகளில் உள்ள அன்பர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற அவர்கள் விரும்பினால் அவர்களின் பெயரில் சிறப்பு பரிகார பூஜை செய்யப்படும் .
![]() |
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com

