சூரியன் நிற்கும் வீடு:
தமிழ் மாதம் சித்திரை 1 ஆம் தேதி மேஷத்தில்
வைகாசி 1 ஆம் தேதி எனில் ரிஷபத்தில்
இப்படி சூரியன் இருக்கும் இடம் நீங்கள் பிறந்த தமிழ் மாதத்தை குறிக்கும்.
நீங்கள் பிறந்தது பகலா? இரவா?
சூரியன் நின்ற வீட்டில் இருந்து முதல் 6 வீட்டில் லக்கினம் இருந்தால் பகலில் பிறந்தவர் ஆவார்
7 ஆம் வீட்டில் இருந்து 12 ஆம் வீட்டில் லக்கினம் இருந்தால் இரவில் பிறந்தவர்உதாரணமாக சூரியன் கடகத்தில் இருந்து லக்கினம் மீனத்தில் இருந்தால் கடகம் முதல் மகரம் வரை பகல் அதாவது காலை 6 மணி முதல் மாலை 6 மணி அதுவே
கும்பம் என்றால் மாலை 6 to 8 Mani வரை
மீனம் என்றால் இரவு 8 to 10 மணிக்குள் பிறந்து இருப்பார். இது சூரிய உதயம் ஆன நேரம் முதல் கணக்கிடப்படும். நான் சரியாக 6 மணி என்று எடுத்துக்கொண்டு உள்ளேன்.
லக்னம் சரியா?
சூரியன் நிற்கும் வீட்டில் இருந்து ஒவ்வொரு 2 மணி நேரமும் (காலை சூரியன் உதிக்கும் நேரம் தொடங்கிய மணி முதல்) எண்ணிக்கொண்டு வந்தால் லக்னம் இருக்கும் இடம் கணிக்கலாம்.
உதாரணமாக சூரியன் கடகத்தில் - காலை 9.20 க்கு ஜாதகர் பிறந்து இருந்தால்
காலை மணி 6 to 8 கடக லக்னம்
காலை 8 to 10 சிம்ம லக்கினம்எனவே 9.20 இல் பிறந்த நபர் ஜாதகத்தில் இருப்பது சிம்ம லக்கினம் ஆகும்
சூரியனில் இருந்து புதன் 28 டிகிரி மட்டுமே முன் பின் செல்லும். சுக்கிரன் 48 டிகிரி வரை தான் சூரியனிடம் இருந்து முன் பின் செல்ல முடியும். ஒரு ராசிக்கட்டம் (மேஷம் முதல் மீனம் வரை ஒவ்வொரு ராசியும் 30 டிகிரி ஆக மொத்தம் 12 ராசி கட்டத்திற்கு 360 டிகிரி )
என்பது மொத்தம் 30 டிகிரி. இதனை எல்லோர் ஜாதகத்திலும் எளிதில் கண்டு பிடிக்க முடியும்.
ராகு கேது அமைப்பு :
ராகுவுக்கு கேது சரியாக 180 டிகிரி தள்ளி இருக்கும்
அதாவது ராகு நின்ற வீட்டிற்கு 6 வீடு தள்ளி அதாவது நேர் 7 ஆம் வீட்டில் அதாவது சம சப்தமம் ஆக கேது இருக்கும்.
மேலும் நீங்கள் 1978 இல் பிறந்து உள்ளீர்கள் என்று வைத்து கொண்டால் 1978 ஆம் ஆண்டு பிறப்பவர் அனைவரின் ஜாதகத்திலும் சனி, குரு, ராகு, கேதுக்கள் அதே ராசி வீட்டில் இருக்கும்.உதாரணமாக குரு மிதுனம், சனி சிம்மம்,ராகு கன்னி, கேது மீனம் என்றால் அந்த ஆண்டு பிறப்பவர்கள் அனைவருக்கும் அந்த 4 கிரகங்களும் அதே வீட்டில் தான் இருக்கும் .
குறிப்பாக ஒருவரது ஜாதகத்தின் லக்கினம் வாங்கிய நட்சத்திரம் 1,3 ஆம் பாதமாக இருப்பின் ஆண் ஜாதாகம் என்றும் 2,4 ஆம் பாத நட்சத்திர சாரம் எனில் பெண் ஜாதகமாக இருக்கும் என்பது மூல நூல்களில் உள்ள கருத்து. தற்போது இதில் நிறைய முரண்பாடுகள் உள்ளன.
குறிப்பாக காரகத்துவம் மற்றும் ஆதிபத்தியம் போன்ற விஷயங்களில் அதிக அனுபவம் உள்ள ஜோதிடரை அணுகினால் உங்கள் ஜாதகம் எந்த அளவு சரி என்று நிச்சயம் கூறமுடியும்.
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com

