மருத்துவரிடம் உடலை காண்பிப்பது போல ஜோதிடரிடம் ஜாதகத்தைக் காண்பித்து அதற்கு ஏற்றவாறு தனது வாழ்க்கை முறையையும், உணவு முறையையும் நெறிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
கிரகங்களில் சூரியன் தான் இதய நோய்கள், கண் நோய்கள், முதுகு வலி, முதுகெலும்பு தண்டு வடத்தில் பிரச்னைகள், ரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் ஏற்பட காரணமாகிறது.
ஜோதிட ரீதியா பார்க்கும் போது சூரியன் ராஜ கிரகம். இதயம் ராஜ உறுப்பு. ஜாதகத்துல சூரியன் கெட்டால் இதய முடக்கம், மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.
ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் 4 ல் இருந்து சனி மற்றும் செவ்வாயால் பார்க்கப் பெற்றால் இதய நோய் வரும்.
கடகம் சிம்மம் இந்த ராசிகளில் கிரகம் பாதிக்கப்பட்டு இருந்து சனி, சந்திரன், செவ்வாய் தசை புத்தி நடக்கும் போது இதய நோய் வரும்.
இதயத்தின் இயக்கத்தை சூரியன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஜாதகத்தில் எட்டாம் பாவாதிபதியாக சூரியன் அமைந்து, அந்த சூரியனோடு தீய கிரஹங்களின் இணைவு ஏற்பட்டு, லக்னமும், லக்னாதிபதியும் பலமிழந்து இருந்தால் அவருக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.
இருதய கோளாறுகளுக்கு சூரியனும், சந்திரனும் பொறுப்பாகின்றனர். ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருந்தால் அவருக்கு இருதயக் கோளாறு ஏற்படாது. மாறாக, சந்திரனுக்கு பாவ கிரகங்களின் சேர்க்கை, கிரக யுத்தம் காணப்பட்டால் இருதயக் கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
ஒருவரின் ஜாதகக் கட்டத்தில் மனோகாரகரான சந்திரன் பலவீனமடைந்திருந்தால் அவருக்கு ரத்த அழுத்த பிரச்சினை ஏற்படும்.
ஜோதிடத்தில் ரத்தத்திற்கு உரிய கிரகமாக செவ்வாய் கருதப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் உடன் குரு சேர்க்கை பார்வை இருந்தால் உயர் ரத்த அழுத்தம், இருதயக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அஜீரணம்,வாயு கோளாறுகள், இதய படபடப்பு இருந்தால் உங்க ஜாதக கட்டத்தில் குரு நீசம், மறைவு பெற்று பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று அறிந்து கொள்ளலாம்.
இதயத்துக்கு தேவை குரு பலம். குரு கெட்டாலும் இதய பிரச்சினை வரும். ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரனுக்கு 6,8,12 போன்ற இடங்களில் குரு இருந்தால் அதனை சகட யோகம் எனக் கூறுவர். அதுபோன்ற அமைப்பு உள்ளவர்களுக்கு இருதயக் கோளாறு, கொழுப்பு அதிகரிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.
தினசரியும் சூரிய வழிபாடு செய்யும் போது ஆதித்ய ஹிருதயம் மந்திரத்தை சொல்லலாம். செவ்வாய்கிழமை முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும். ஜாதகத்தில் சூரியன், குரு பாதிக்கப்பட்டவர்கள் தினசரியும் மன அமைதிக்காக தியானம் செய்ய வேண்டும். தியானம் செய்யும் போது முருகன் வேல், தாமிரத்தில் டாலர் செய்து கழுத்தில் அணிய இதய நோய் பாதிப்புகளை தவிர்க்கலாம்.
வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு ஜோதிட பலன்கள் - ஜோதிடம் சம்பந்தமான கேள்விகளுக்கு மெயிலில் பதில் அனுப்பி வைக்கப்படும்
![]() |
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com


